PAK முத்தரப்பு டி20 தொடர் | விலகிய ஆப்கான்.. உள்ளே நுழைந்த ஜிம்பாப்வே!
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியதை அடுத்து, அதற்குப் பதில் ஜிம்பாப்வே அணி இணைந்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ராவல்பிண்டி, லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி நடத்திய வான்வெளி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தான், முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி விலகியதால் அதற்குப் பதிலாக ஜிம்பாப்வே அணி சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை அடுத்த மாதம் 17ஆம் தேதி எதிர்கொள்கிறது.