ஐஎஸ்பிஎல் டி10: சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா! மற்ற அணிகளை வாங்கியவர்கள் யார், யார்?

ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடைபெற இருக்கும் டி10 போட்டிக்கான சென்னை அணியை, நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
சூர்யா
சூர்யாட்விட்டர்

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். ரசிகர்களின் ஆர்வத்தைத் தணிக்கும்வகையில் கிரிக்கெட் போட்டிகளிலும் பலவித மாற்றங்களும் விதிகளும் புகுத்தப்பட்டு விருந்து படைத்துவருகின்றன. அந்த வகையில் மூன்று வகை (டி20, ஒருநாள், டெஸ்ட்) கிரிக்கெட் போட்டிகளுக்கு மத்தியில் தற்போது டி10 வகையிலான கிரிக்கெட் போட்டியும் தற்போது உலகம் முழுவதும் விளையாடப்பட்டு ரசிகர்களுக்கு புத்துணர்வை அளித்து வருகிறது.

பிசிசிஐ
பிசிசிஐpt desk

ஐரோப்பிய நாடுகளில் இவ்வகையான போட்டிகளே அதிகம் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், இத்தகைய வடிவிலான போட்டியையும் வருங்காலங்களில், பிசிசிஐ நடத்தத் திட்டமிட்டுள்ளது.

டி10 தொடர் இந்தியாவில் ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்குபெற உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வோர் அணியும் தற்போது வாங்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதை, அவரே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ள சூர்யா, ”வணக்கம் சென்னை.. ஐஎஸ்பிஎல் டி10 தொடரில் சென்னை அணியின் உரிமையை பெற்றதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்கள் சிறந்து விளங்கும் ஒரு அணியை சேர்ந்து உருவாக்குவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சூர்யாவின் சினிமா ரசிகர்கள் தவிர, சென்னை ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதில், மும்பை அணியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி உள்ளனர். இன்னும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் விவரம் மட்டும் வெளியாகாமல் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com