Asia Cup Final: ஒரே போட்டியில் இந்திய வீரர்கள் படைத்த பல சாதனைகள்!

2023 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
Asia Cup Final 2023
Asia Cup Final 2023Twitter

விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த 2023 ஆசியக்கோப்பை தொடர் ஒருவழியாக முடிவை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 7 முறை ஆசிய சாம்பியனான இந்திய அணியும், 6 முறை ஆசிய சாம்பியனான இலங்கை அணியும் அடுத்த கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்தின.

ஆசிய கோப்பை பைனலில் 50 ரன்னில் சுருண்ட இலங்கை அணி!

கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வுசெய்தார். இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் நாங்களும் பேட்டிங் தான் எடுத்திருப்போம் என கூற, இலங்கை அணி பெரிய ஸ்கோரை போர்டில் போடப்போகிறது என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய கனவோடு களத்திற்கு வந்த இலங்கை வீரர்களை தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் தடுமாற வைத்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.

ind vs sl
ind vs sl

முதல் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா பிள்ளையார் சுழி போட, அடுத்துவந்த முகமது சிராஜ் இலங்கை அணிக்கு நிம்மதியற்ற ஒரு இரவை ஏற்படுத்தினார். தொட்டதெல்லாம் தங்கம் என்பது போல் அவர் வீசிய அனைத்து பந்தும் விக்கெட்டுகளாக மாறின. இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என கலக்கிய முகமது சிராஜ் ஒரே ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரை தொடர்ந்து அதே அட்டாக்கை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா அவருடைய பங்கிற்கு இலங்கைக்கு சோதனை மேல் சோதனை கொடுத்தார். இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி 15.2 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Asia Cup Final 2023
16 பந்துகளில் 5 விக். வீழ்த்தி உலக சாதனை சமன்! ODI-ல் சிராஜ் செய்த தரமான சம்பவம்!

8-வது முறையாக ஆசியக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

51 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு களத்திற்கு வந்த இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இருவரும் போட்டியை விரைவாகவே முடித்து வைத்தனர். 9 பவுண்டரிகளை விரட்டிய இந்த ஜோடி 6.1 ஓவரிலேயே 51 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது.

Asia Cup Final 2023
Asia Cup Final: 10 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி! 8வது முறையாக ஆசியக்கோப்பையை வென்றது இந்தியா!
ind vs sl
ind vs sl

இதுவரை 7 முறை ஆசியக்கோப்பையை வெற்றிபெற்றிருக்கும் இந்திய அணி, 8வது முறையாக ஆசியக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஒரே போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள்!

* இந்தியா தனது 8-வது ஆசியக்கோப்பையை கைப்பற்றியது

* குறைவான (16) பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, ODI-ல் அதிவேகமாக படைத்தவர் என்ற உலக சாதனையை (சமிந்தா வாஸுடன்) முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்

* ODI-ல் குறைவான (1002) பந்துகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் (அஜந்தா மெண்டிஸ்க்கு பின்) என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார்.

Siraj
Siraj

* ODI-ல் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் சிராஜ்

* ODI கிரிக்கெட்டில் அதிக பந்துகளை (263) வெளியில் வைத்து மிகப்பெரிய வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது

* 6.1 ஓவரில் செய்த இந்தியாவின் ரன் சேஸிங் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக சேஸ் செய்யப்பட்ட 5-வது சிறந்த சேஸிங்காக மாறியுள்ளது

Asia Cup Final 2023
Asia Cup Final 2023

* ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை (98) பதிவு செய்த அணியாக இந்தியா தொடர்கிறது

* ஆசியக்கோப்பையை 2வது முறையாக வெல்லும் 3-வது இந்திய கேப்டனாக (தோனி & அசாருதின் உடன்) ரோகித் சர்மா மாறியுள்ளார்

Asia Cup Final 2023
ஆசிய கோப்பை வரலாற்றில் சிறந்த 5 போட்டிகள்! இந்த சம்பவங்களை எல்லாம் எப்போதும் மறக்க முடியாது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com