“சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த இதுவே சிறந்த தருணம்”-INDvPAK போட்டி குறித்து பாக். முன்னாள் வீரர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆக்கிப் ஜாவேத், இந்திய அணியை இந்தியாவில் வைத்தே வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேசியுள்ளார்.
Ind vs Pak
Ind vs PakPT

2023ஆம் ஆண்டு ஒருநாள் ஆடவர் உலகக்கோப்பை தொடர், வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொண்டாடப்படும் நவராத்திரி காரணமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 15ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Ind vs Pak
“சிவராத்திரி, காளி பூஜைக்கெல்லாம்..”- இந்தியா வர ஒப்புக்கொண்டாலும் பாதுகாப்பு அச்சத்தில் பாகிஸ்தான்!
Ind vs Pak
Ind vs PakTwitter

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரரும், 1992 உலகக்கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றவருமான ஆக்கிப் ஜாவேத் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்துவதற்கு இதுதான் சரியான தருணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவை விட சிறந்த அணியாக பாகிஸ்தான் இருக்கிறது!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசியிருக்கும் ஜாவேத், “இந்தியாவை விட பாகிஸ்தான் அணியே மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட சிறந்த பேலன்ஸ் உள்ள அணியாக தெரிகிறது. இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் அனைவரும் ஒன்று ஃபிட்னஸ் பிரச்னைகளாலும், மற்றொன்று ஃபார்ம் அவுட் பிரச்னைகளாலும் தடுமாறி வருகின்றனர். அந்த அணி இப்போது தான் அவர்களுக்கான பிளேயிங் 11 வீரர்களையே தேடிவருகிறது. இந்த தருணத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை இந்தியாவில் வைத்தே வீழ்த்த முடியும். இதனை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளதாக க்ரிக்விக் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சிறந்த ஃபார்மில் இல்லாமல் இருக்கிறார். அதே போல ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் காயத்தால் அவதிபட்டுவரும் நிலையில், மிடில் ஆர்டர் வீரர்கள் இல்லாமல் இந்தியா தடுமாறி வருகிறது. பும்ரா இல்லாமல் சரியான பந்துவீச்சு கூட்டணி இல்லாமலும் இந்திய அணியின் சிறந்த பிளேயிங் 11 கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.

உலகக்கோப்பை போட்டிகளில் 7 முறை வீழ்த்தி இந்தியா ஆதிக்கம்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை பாகிஸ்தான் இந்தியாவை வென்றதே இல்லை என்ற ரெக்கார்ட் இன்னும் நீடித்துவருகிறது. ஒட்டுமொத்தாமாக 7 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சந்தித்துள்ளன. இவற்றில் இந்திய அணி 7 முறையும் வென்று அசத்தியுள்ளது. இதனால் இந்திய அணியின் உலகக்கோப்பை ரெக்கார்டை உடைக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com