"அவர் நம்மை டெஸ்ட் கிரிக்கெட் மீது காதல்கொள்ள வைக்கிறார்" - பும்ராவை புகழ்ந்த முன்னாள் இந்திய வீரர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 பவுலராக மாறிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 147 வருட டெஸ்ட் வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பும்ரா க்ளாசிக் யார்க்கர்
பும்ரா க்ளாசிக் யார்க்கர்X

எப்போதும் இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த மூன்று வாரங்களாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து வீரர்களின் பாதுகாப்போடு விளையாடி வருகிறார். சுழற்பந்து வீச்சாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆடுகளங்களில் வேடிக்கைக்காக ஸ்டம்புகளை வேரோடு பிடுங்குகிறார். அவருடைய அசாத்தியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி மிரண்டு போய் உள்ளது.

பும்ராவின் அபாரமான பந்துவீச்சை கண்டு மிரண்ட இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், “பும்ராவின் ரிலீஸ் பாய்ண்ட்களை கட் செய்வதற்கு என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கு எதிராக போராடும் திறமையான வீரர்கள் எங்களிடம் உள்ளனர். விரைவில் அனைவரும் சேர்ந்து அவருக்கு எதிரான கவுண்டர் அட்டாக்கை கண்டுபிடிப்போம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பும்ராவின் அசத்தலான பந்துவீச்சு குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் மீது காதல்கொள்ள வைக்கிறார் என்று பேசியுள்ளார்.

பும்ரா க்ளாசிக் யார்க்கர்
உலக டெஸ்ட் தரவரிசையில் பும்ரா முதலிடம்! 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் வேகப்பந்துவீச்சாளர்!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் மீது காதல்கொள்ள வைக்கிறார்!

அனைத்து ஃபார்மேட்களிலும் நம்பர் 1 வீரராக மாறிய ஒரே பந்துவீச்சாளர் என்ற உலகசாதனை படைத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய ஆகாஷ் சோப்ரா, "ஜஸ்பிரித் பும்ராவைப் போல் யாரும் இல்லை. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். முதுகில் பலத்த காயத்துடன் இருந்த பும்ரா பரபரப்புடன் திரும்பியுள்ளார். அவர் பேட்ஸ்மேன்களின் எண்ணத்துடன் விளையாடி, அவர்களின் திறமைகளை சோதிக்கிறார். பும்ராவால் ஒவ்வொரு முறையும் பந்தை உள்ளே கொண்டு வந்து வெளியே எடுக்க முடிகிறது” என்று புகழ்ந்து பேசினார்.

மேலும் பும்ராவை புகழ்ந்த அவர், “பும்ரா அவருடைய அபாரமான ஆட்டத்தால் நம்மை டெஸ்ட் கிரிக்கெட் மீது காதல்கொள்ள வைக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலர் ஆனதற்கு அவருக்கு வாழ்த்துகள். இந்த சாதனையை செய்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளரும், அனைத்து ஃபார்மட்களிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஒரே பந்து வீச்சாளரும் அவர்தான். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறுகிறார்கள், ஆனால் அவர் தொடர்ந்து விளையாடவேண்டும்” என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.

பும்ரா க்ளாசிக் யார்க்கர்
"100 ஆண்டுகளில் தலைசிறந்த யார்க்கர்"! ரிப்பீட் மோட்ல பாத்துட்டே இருக்கலாம் சார்! இது பும்ரா மேஜிக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com