”எங்கிருந்து வேண்டுமானாலும் உங்களால் வெல்ல முடியும்”! - ரோகித் கொடுத்த பூஸ்ட்! துபே நெகிழ்ச்சி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 60 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்ற ஷிவம் துபே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரோகித் - துபே
ரோகித் - துபேX

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மொஹாலியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முகமது நபியின் அதிரடி ஆட்டத்தால் 158 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில், இறுதிவரை நிலைத்து நின்று 60 ரன்கள் அடித்த ஷிவம் துபே இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான இப்ராஹிம் ஜத்ரான் விக்கெட்டை வீழ்த்திய ஷிவம் துபே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேப்டன் ரோகித் சொன்ன அந்த வார்த்தை! ஷிவம் துபே நெகிழ்ச்சி!

2019ம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த ஷிவம் துபே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 180 ஸ்டிரைக் ரேட்டில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட அரைசதம் அடித்து அசத்தினார். அவருடைய அந்த பேட்டிங்கிற்கு பிறகு துபே இந்திய அணியோடு நீண்டதூரம் பயணிக்க போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் பேட்டிங்கில் அதிக வேரியேசன் இல்லாததால் துபேவை ஓரங்கட்டியது இந்திய அணி. ஆனால் தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கில் கடுமையாக உழைத்த ஷிவம் துபே, தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஷிவம் துபே
ஷிவம் துபே

கேப்டன் ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் இளம் வீரர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து பேக்கப் செய்யக்கூடியவர். இளம் வீரர்களிடமிருந்து எப்படி அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். அப்படி தான் ஷிவம் துபேவிற்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வார்த்தையை கூறி பேக்கப் செய்துள்ளார். போட்டிக்கு முன்னதாக ரோகித் கூறியதை தெரிவித்திருக்கும் ஷிவம் துபே நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ரோகித் - துபே
ரோகித் - துபே

இதுகுறித்து ஷிவம் துபே கூறுகையில், “கேப்டன் ரோகித் என்னிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னார். நீங்கள் எப்படி ஆடுகிறீர்களோ, எது உங்களுடைய பலமோ, அப்படியே தொடர்ந்து விளையாடுங்கள். எப்போதும் பாசிட்டிவ் கிரிக்கெட்டை ஆடுங்கள். உங்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆட்டத்தை வெல்ல முடியும் என்று எங்களுக்கு தெரியும். உங்களால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும், தொடர்ந்து நேர்மறையாக விளையாடுங்கள்” என்று கூறியதாக துபே போட்டிக்கு பிறகு தெரிவித்துள்ளார்.

ரோகித் - துபே
”பவுலர்களுக்கு அதிக வலி கொடுத்தவர்” - உடைக்கவே முடியாத 6 உலக சாதனைகளை வைத்திருக்கும் ராகுல் டிராவிட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com