\
Dhruva Pandove
Dhruva Pandovemeta ai

13 வயதில் கிரிக்கெட் மேதை.. 18 வயதில் மரணம்! இந்தியா தொலைத்த வைரம்!

சூர்யவன்ஷிக்கு முன்பே 13 வயதில் கிரிக்கெட் உலகை மிரட்டி 18 வயதில் மரணம் எய்திய இந்திய கிரிக்கெட் மேதை துருவா மகேந்தர் பாண்டோவ் யார் என்று தெரியுமா?
Published on
Summary

சச்சின் டெண்டுல்கரின் சமகாலத்தவராக கருதப்பட்ட துருவா பாண்டோவ், இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் எதிர்காலம் என பாராட்டப்பட்டார். ஒடிசாவில் தியோதர் கோப்பை ஆட்டத்துக்குப் பிறகு, பெற்றோரை பார்க்க அம்பாலா திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி 18 வயதில் மரணம் அடைந்தார். அவரது தாய் வேதனையில் அவரது மட்டையை எரித்தார்; பஞ்சாப் சங்கம் துருவா மாண்டோவ் டிராபி மூலம் அவரை நினைவுகூர்கிறது.

பஞ்சாபைச் சேர்ந்த அந்த இடது கை கிரிக்கெட் வீரர், தனது மரணத்தின் போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்காக தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தார். அரிதாக கிடைக்கும் கிரிக்கெட் திறமையாளன் என சச்சினுடன் மீண்டும் மீண்டும் ஒப்பிடப்பட்ட துருவா பாண்டோவ், சச்சினின் சமகாலத்தில் இந்தியாவிற்கு கிடைத்த மற்றொரு கிரிக்கெட் மேதையாக பார்க்கப்பட்டார். 13 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம், 14 வயதில் இளம் இந்திய வீரராக சதம், இளம் கிரிக்கெட் நட்சத்திரம் என்ற அடையாளம் எல்லாம் கிடைத்து, அவரை இந்தியாவின் அடுத்த எதிர்காலமாக மாற்றியபோது 18 வயதில் துருவாவை மரணம் தழுவியது.

அந்தத் துயரச் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், துருவா மகேந்தர் பாண்டோவ் யார் என்பது இப்போது மிகச் சிலருக்கே நினைவிருக்கிறது. துருவா, மாபெரும் சச்சின் டெண்டுல்கரின் சமகாலத்தவர், அவர் ஒரு பேட்டிங் மேதையாகவும் திகழ்ந்தார். தனது 13 வயதிலேயே, பஞ்சாப் அணிக்காக தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். இன்று வைபவவ் சூர்யவன்ஷிக்காக ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்களோ, அதேபோல, 1992 ஜனவரி 31 அன்று அம்பாலாவில் மரணம் குறுக்கிட்டு அவர் உயிரைப் பறித்துச் செல்வதற்கு முன்பு, துருவா அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

சச்சின் தன்னுடைய 15 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் சதமடித்த அதே ஆண்டு 14 வயதில் சதமடித்திருந்தார் துருவா. 17 வயதில் ரஞ்சிக்கோப்பையில் 1000 ரன்களை குவித்த இளம்வீரராக எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த அவர், இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுடன் சேர்ந்து விளையாடும் கனவை கொண்டிருந்தார்.

ஆனால் அன்றைய இரவு ஒடிசாவில் ஒரு தியோதர் கோப்பை போட்டியில் விளையாடிவிட்டு அம்பாலா சென்றடைந்தார் மாண்டோவ். வட இந்தியாவில் குளிரும் பனிமூட்டமும் நிறைந்த ஜனவரி மாதத்தில், அடுத்த போட்டிக்குள் தாய்-தந்தையை பார்த்துவிட்டு வரலாம் என்று சென்ற துருவா கடைசிவரை வீடுபோய் சேரவில்லை. அவர் சென்ற வண்டி விபத்துக்குள்ளாக 18 வயதில் தன் கனவுகளை தொலைத்து மரணம் எய்தினார் துருவா. அவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவருடைய தாய், வேதனையில் அவரின் கிரிக்கெட் மட்டையை எரித்தார்.

அந்த இளம் கிரிக்கெட் மேதையை நினைவுகூறும் விதமாக துருவா மாண்டோவ் டிராபி என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் நடத்திவருகிறது. அனில் கும்ப்ளே, அஜய் ஜடேஜா போன்ற ஜாம்பவான்கள் துருவா மாண்டோவின் திறமையை இன்றுவரை மெச்சிவருகின்றனர்.!

Dhruva Pandove
PAK பயிற்சியாளர் ஒரு இந்தியா ஏஜெண்ட்.. பகீர் கிளப்பிய பாகிஸ்தான் வீரர்! துரந்தர் 2.O!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com