IND-NZ இடையேயான 3வது ODI போட்டி ரத்து.. 6-1 முன்னிலையில் தொடரும் நியூசிலாந்து!
இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் மழையால் ரத்து செய்யப்பட்டது. மைதானத்தில் 6-1 என முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து, தொடரில் இந்திய அணியின் வெற்றியை தடுக்க முடியாமல் இருந்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலைபெற்றுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி நியூசிலாந்தின் ஹாமில்டனில் நடைபெறவிருந்தது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அதிகப்படியான மழை பெய்ததால், ஆட்டம் தாமதாகவே தொடங்கப்பட்டது. டாஸ் போடப்பட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆனால் மீண்டும் மழைக் குறுக்கிட்டு கடைசிவரை நிற்காததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஹாமில்டன் மைதானத்தில் 8 போட்டிகளில் இந்தியா உடன் மோதியிருக்கும் நியூசிலாந்து 6-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் எப்போதும் நியூசிலாந்து சிறப்பாக செயல்படும் என்பதால், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று 2-1 தொடரை மாற்றும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் போட்டி மழையால் கைவிடப்பட்டது நியூசிலாந்துக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 9 போட்டிகளுக்கு பிறகு ஹாமில்டனில் 6-1 என நியூசிலாந்தின் சாதனை தொடர்கிறது.

