india - australia semi final
india - australia semi finalweb

அரையிறுதிப் போட்டி | ஷபாலி வெர்மா, ரிச்சா கோஸ் IN.. இந்திய அணி பந்துவீச்சு! | IND vs AUS

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீசுகிறது..
Published on

2025 மகளிர் உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய 4 அணிகள் தகுதிபெற்றன.

2025 மகளிர் உலகக்கோப்பை
2025 மகளிர் உலகக்கோப்பை

முதல் அரையிறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது..

இந்நிலையில் இன்று நவி மும்பையில் நடக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தோல்வியே காணாமல் இருந்துவரும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி..

india - australia semi final
இறுதிப்போட்டியில் யார்? ஆஸி. - இந்தியா இன்று பலப்பரீட்சை! அணிகளின் பலம், பலவீனம் என்ன? | CWC 2025

ரிச்சா கோஸ்,ஷபாலி ரிட்டர்ன்ஸ்..

நவி மும்பையில் நடக்கவிருக்கும் அரையிறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.. கடந்தமுறை இங்கு நடந்தபோட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போட்டியின் முடிவு மழையால் பாதிக்கப்படுமா என்ற சூழலும் உருவாகியுள்ளது..

pratika rawal
pratika rawal

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷபாலி வெர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் கடந்தபோட்டியில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாத ரிச்சா கோஸும் இடம்பெற்றுள்ளார்..

அரையிறுதிப்போட்டிக்கான இந்திய அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிருதி மந்தனா, அமன்ஜோத் கவுர், ஹர்மன்ப்ரீத் கவுர்(c), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ்(w), ராதா யாதவ், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்

india - australia semi final
”எனக்கு எண்டு கார்டே இல்லை” | 38 வயதில் முதலிடம் பிடித்து ரோகித் சர்மா சாதனை! | ICC

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com