இந்தியாவில் மேலும் 2 புதிய மைதானங்கள்... சொந்தமண்ணில் 23 போட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் அணி

இந்தியாவில் மேலும் 2 புதிய மைதானங்கள்... சொந்தமண்ணில் 23 போட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் அணி

இந்தியாவில் மேலும் 2 புதிய மைதானங்கள்... சொந்தமண்ணில் 23 போட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் அணி
Published on

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான சீசனில் 23 சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.

அதேபோல இந்த சீசனில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்டு சர்வதேச மைதானம் மற்றும் அசாமின் கௌகாத்தியை அடுத்த பர்ஷாபாரா ஆகிய இரு மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அணிக்கெதிராக வரும் நவம்பரில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடர் போட்டிகள் இந்த மைதானங்களில் நடக்கும் என்றும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதை கேரள கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. 

இந்திய அணி, வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதத்துக்குட்பட்ட கால இடைவெளியில் சொந்தமண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. செப்டம்பரில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த தொடர் அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிகிறது. இதையடுத்து அக்டோபர் இறுதியில் இந்தியா வரும் நியூசிலாந்து அணி, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்கிறது. 

இந்த தொடருக்கு அடுத்தபடியாக நவம்பரில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடர்களை முடித்துக் கொண்டு இந்திய அணி, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. சொந்தமண்ணில் நடைபெறும் போட்டிகளை நாடு முழுவதும் உள்ள முக்கியமான அனைத்து மைதானங்களிலும் நடத்தும் வகையில் போட்டி அட்டவணைகளை பிசிசிஐ தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com