கிரிக்கெட் போட்டியில் எட்டாம் நம்பர் சென்டிமென்ட் முக்கியமானது என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அதென்ன 8-ம் நம்பர் சென்டிமென்ட்?
’இப்போது இந்திய வீரர் பேட்டிங் செய்கிறார். அணியின் ஸ்கோர், 17, 26, 35, 44, 53, 62, 71 என 8-ம் எண்ணின் கூட்டுத்தொகையாக இருக்கிறது. இப்போது பந்தை எதிர்கொள்ளும் வீரர் நிச்சயம் தடுமாறுவார், அல்லது விக்கெட்டை இழப்பார். இது 90 சதவிகிதம் நடந்திருக்கிறது. இதே போல பந்து வீச்சிலும் 8-ம் நம்பர் வந்தால் இதே நிலைதான். அதாவது 8-வது ஓவர் வீசும் போதோ, 3 வது ஒவரில் ஐந்தாவது பந்து வீசும்போதோ, 4-வது ஓவரில் 4-வது பந்து, 5-வது ஓவரில் 3 வது பந்து... இப்படி வரும்போது அது கண்டிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாக இருக்கும். இதற்கு முன் நடந்த பல போட்டிகளில் விக்கெட் விழுந்ததை பார்த்தால் இப்படித்தான் இருக்கும்’ என்று கிரிக்கெட் ஜோஸ்யம் சொல்கிறார்கள் ரசிகர்கள் சிலர்.
இப்படியெல்லாமா இருக்கும்? என்று ஆச்சரியப்பட வைக்கிறது இவர்கள் ஜோஸ்யம். இந்தியா - பங்களாதேஷ் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்யும் போது, மோர்டாசா பந்தில் அவுட்டானார் தவான். அப்போது மோர்டாசா வீசியது 8-வது ஓவர் என்று சமீபத்திய உதாரணம் சொல்லி தங்கள் ஜோஸ்யத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.
இதெல்லாம் ஓவரா தெரியலையா ரசிகர்களே!