தோனி ஒரு அதிரடி கேப்டன் - ஸ்ரீசாந்த் பேட்டி

தோனி ஒரு அதிரடி கேப்டன் - ஸ்ரீசாந்த் பேட்டி

தோனி ஒரு அதிரடி கேப்டன் - ஸ்ரீசாந்த் பேட்டி
Published on

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், இன்று இரவு 7:30 மணிக்கு Helo லைவ்வில் வந்து Helo விளையாட்டு குடும்பத்துடன் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினார். அதில், அவர் தனது கிரிக்கெட் பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

Helo ரசிகர்களுக்கு பிரத்யேக ரகசியங்கள்: 2011 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, அவர் சற்று பதட்டமாக இருந்ததாகவும், ஆனால் சச்சின் மற்றும் யுவ்ராஜ் ஆகியோர் அவரை சிறப்பாக பந்துவீச ஊக்கப்படுத்தியதாகவும் கூறினார். இந்திய அணி வீரர்கள் அனைவரும் அந்த போட்டியை சச்சினுக்காக வெல்ல விரும்பினார்கள். அத்துடன் வென்றோம். அது அவருக்கு ஒரு சிறந்த அனுபவம், அதுவே அவருக்கு கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்ததை நினைவுகூர்ந்தார். சச்சின், ஹைடன், லாரா ஆகியோர் தனக்கு மிகவும் பிடித்த வீரர்கள் எனவும், லாராவின் தீவிர ரசிகன் எனவும் அவர் குறிப்பிட்டார்

2007 மற்றும் 2011ஆம் ஆண்டு ஆகிய 2 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய ஒரே பந்துவீச்சாளர் என்பதில் மிகவும் பெருமையாக இருப்பதாக ஸ்ரீசாந்த் கூறினார். மேலும், தனது தேர்வில் கங்குலி முக்கிய பங்கு வகித்தார் என குறிப்பிட்டார். அத்துடன், எப்போதும் யார் மீதும் பழி போடக்கூடாது என தன்னுடைய தந்தை கூறியுள்ளதாக தெரிவித்தார். இறுதியாக, பாகிஸ்தான் உடன் நிதி திரட்டுவதற்கான கிரிக்கெட் போட்டி என்றாலும் முதலில் நாடுதான் முக்கியம் என்றார். தற்போது கடுமையாக பயிற்சி செய்து வருவதாகவும், விரைவில் கிரிக்கெட் களத்தில் இறங்க உள்ளதாகவும் கூறினார். கொச்சி மைதானத்தில் சச்சின் விக்கெட்டை வீழ்த்தியது உலகக்கோப்பையை வெல்வதற்கு ஈடான மன நிறைவைக் கொடுத்ததாக ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.

பின்னர், சில விரைவான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

சிறந்த பேட்ஸ்மேன்: விராட்
சிறந்த பவுலர்: பும்ரா
சிறந்த கேப்டன் - கபில் தேவ்
சிறந்த டெஸ்ட் பவுலர் - ஸ்டார்க்
மறக்க முடியாத விக்கெட் - சச்சின்
மறக்க முடியாத போட்டி: 2011 உலகக் கோப்பை
விளையாட விருப்பமான ஐபிஎல் அணி - மும்பை இந்தியன்ஸ்
ஆக்ரோஷமான கேப்டன் - விராட் கோலி
அனுபவசாலியான கேப்டன் - கங்குலி
அதிரடி முடிவு எடுக்கும் கேப்டன் - தோனி

காதல் குறித்து பேசிய ஸ்ரீசாந்த், தன்னுடைய மனைவியை பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிட்டதாகவும், அவர் பிங்க் நிற மேலாடை அணிந்திருந்ததாகவும் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com