''அடுத்த சவால்களை எதிர்கொள்ளத் தயார்'' - வெள்ளை நிற ஜெர்சியில் கெத்தாக நடராஜன்!

''அடுத்த சவால்களை எதிர்கொள்ளத் தயார்'' - வெள்ளை நிற ஜெர்சியில் கெத்தாக நடராஜன்!

''அடுத்த சவால்களை எதிர்கொள்ளத் தயார்'' - வெள்ளை நிற ஜெர்சியில் கெத்தாக நடராஜன்!
Published on

'வெள்ளை நிற ஜெர்சி அணியும் பெருமைமிக்க தருணம்' என கிரிக்கெட் வீரர் நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம்பட்ட உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார் நடராஜன். இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வெள்ளை நிற ஜெர்ஸியை அணிந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடராஜன். அதில், வெள்ளை நிற ஜெர்சி அணியும் பெருமைமிக்க தருணம். அடுத்த சவால்களை எதிர்கொள்ளத் தயார் என பதிவிட்டுள்ளார். நடராஜனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com