"பெட்ரோலின் இன்னிங்ஸ் பிரமாதம்"-மனோஜ் திவாரி நக்கல் 'ட்வீட்'

"பெட்ரோலின் இன்னிங்ஸ் பிரமாதம்"-மனோஜ் திவாரி நக்கல் 'ட்வீட்'

"பெட்ரோலின் இன்னிங்ஸ் பிரமாதம்"-மனோஜ் திவாரி நக்கல் 'ட்வீட்'
Published on

பெட்ரோலின் இன்னிங்ஸ் மிகப்பிரமாதமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி நக்கலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.91-க்கும் டிசல் விலை ரூ.85-க்கும் விற்று வருகிறது. இதில் மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலையேற்றத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " பெட்ரோல் இதுவரை பார்த்திராத வகையில் பிரமாதமான இன்னிங்ஸை விளையாடியிருக்கிறது. இந்தக் கடினமான சூழலிலும் கச்சிதமாக விளாசப்பட்ட சதம் இது. முதல் பந்தில் இருந்தே பெரிய இன்னிங்ஸை தொடும் என எதிர்பார்த்தோம். பெட்ரோலுக்கு டீசல் அளித்துள்ள பார்ட்னர்ஷிப்பும் அபாரம். சாமானிய மக்களுக்கு எதிராக விளையாடுவது எளிதல்ல. ஆனால், நீங்கள் (பெட்ரோல், டீசல்) இருவருமே அதை சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள்" என நக்கலாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com