இந்திய அணியுடனான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் முனைப்புடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் என்ற நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடர்ந்தது. அரைசதம் அடித்த புஜாரா 52 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜடேஜா 22 ரன்களும், விர்த்மான் சாஹா 29 ரன்களும் எடுத்தார். முகமது ஷமி 24 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 172 ரன்களில் முடிவுக்கு வந்தது. சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களான கருணாரத்னே 8 ரன்களும், சமரவிக்ரமா 23 ரன்களும் எடுத்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீரர்களான திரிமானேவும், ஏஞ்சலோ மேத்யூசும் அரைசதம் அடித்தனர்.