அமெரிக்க கிரிக்கெட் மைதானத்துக்கு கவாஸ்கர் பெயர்!

அமெரிக்க கிரிக்கெட் மைதானத்துக்கு கவாஸ்கர் பெயர்!

அமெரிக்க கிரிக்கெட் மைதானத்துக்கு கவாஸ்கர் பெயர்!
Published on

அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு இந்தியாவை சேர்ந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முதலாக 10ஆயிரன்களை குவித்தவர். 30 சதங்கள் அடித்தவர் என்ற பெருமை பெற்றவர். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் இவரது பெயர், மும்பை வான்கடே ஸ்டேடியத்தின் ஸ்டாண்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே கிரிக்கெட் கிளப்பின் மைதானத்துக்கு கவாஸ்கர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமது பெயரிலான மைதானத்தை கவாஸ்கரே கடந்த 15-ம் தேதி திறந்து வைத்தார். 

இதுபற்றி கவாஸ்கர் கூறும்போது, ‘இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் மூலம் பெருமையாக உணர்கிறேன். இது எனக்கு அளிக்கப்படும் வித்தியாசமான கவுரம். குறிப்பாக கிரிக்கெட்டை முக்கிய விளையாட்டாக கொள்ளாத ஒரு நாட்டில் இப்படியொரு மரியாதை கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். 

இந்திய விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் வெளிநாட்டில் உள்ள மைதானத்திற்கு வைக்கப்படுவது இதுவே முதன்முறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com