"போங்கைய்யா நீங்களும் உங்க வேர்ல்டு கப்பும்" மழையால் கடுப்பான ரசிகர்களின் மீம்ஸ்

"போங்கைய்யா நீங்களும் உங்க வேர்ல்டு கப்பும்" மழையால் கடுப்பான ரசிகர்களின் மீம்ஸ்

"போங்கைய்யா நீங்களும் உங்க வேர்ல்டு கப்பும்" மழையால் கடுப்பான ரசிகர்களின் மீம்ஸ்
Published on

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக இதுவரை மூன்று போட்டிகள் தடைபட்டுள்ளது. மழையால் தடைப்பட்ட ஆட்டம் காரணமாக அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மழை காலத்தில் எப்படி இங்கிலாந்தில் உலகக் கோப்பையை நடத்தலாம் என்று ரசிகர்கள் ஐசிசியை கேள்வி கேட்கின்றனர். ஆனால், இங்கிலாந்தில் இது கோடை காலம்தான்.

ஆனால், நம்மூர் போல இங்கிலாந்தில் வெயில் வாட்டி வதைக்காது, அப்போதும் சீரான சீதோஷன நிலையே நிலவும். இங்கிலாந்தில் கோடைக்காலம் என்றாலும் அங்கு எப்போது வேண்டுமானாலும் மழைப் பெய்யலாம் என்ற கருத்து கிரிக்கெட் விமர்சகர்களிடையே நிலவுகிறது.

இதனையெல்லாம் புரிந்துக்கொள்ளாத சாமானிய கிரிக்கெட் ரசிகர்கள் பலர், ஐசிசியை கலாய்த்து "உலகக் கோப்பை மழை மீம்ஸ்"களை போட்டு கலாய்த்து வருகின்றனர். இதில் மழையால் பாதிக்கப்பட்ட ஒரே அணி தென் ஆப்பிரிக்காவாதான் இருக்கும்.

 இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்று நினைத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து நான்காவது போட்டியில் வெல்லலாம் என வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

ஆனால், அப்போட்டி மழையால் தடைப்பட்டு இரண்டு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா எனும் பாப்பம்பட்டி அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் பல கிரிக்கெட் ரசிகர்கள் "உங்கள யார் வேர்ட் கப் போட்டிய இங்கிலாந்தில வெக்க சொன்னது", "இனிமேல் நாங்க மேடச்சையே பாக்க மாட்டோம்" என ரசிகர்கள் மீம்ஸ் வாயிலாக கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com