
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ரோகித் சர்மா இல்லாத போட்டிகளில் விராட் கோலியை கேப்டனாக்கும் யோசனையை முன்வைத்த ரவி சாஸ்திரியின் ஐடியா இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேசியுள்ள ஹர்பஜன் சிங் “ரவி சாஸ்திரியின் இந்த யோசனை இந்திய அணியை பின்னோக்கி கொண்டு சென்றுவிடும். இப்படியே பின்னோக்கி சென்றால், எப்போதுதான் நாம் முன்னோக்கி செல்ல முடியும்? இதற்காக விராட் கோலியை மோசமான கேப்டன் என நான் கூறவில்லை. அவர் கேப்டனாக இருந்த வரைக்கும் அவர் மிகப்பிரமாதமாக செயல்பட்டுள்ளளார். அவருடைய ரெக்கார்டுகளை பார்த்தாலே அது தெரியும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர் தலைமையிலான அணி பெற்றி வெற்றிகள் மிக அதிகம்" என்றார்.
ஆனால் ஒன்று. ரோகித் போட்டியில் இல்லாதபட்சத்தில், அவருக்கு பதிலாக வேறொரு வீரரை கேப்டனாக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஒருவேளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்ற முக்கியமான ஆட்டங்களில் ரோகித் இல்லையென்றால் அப்போது விராட் கோலியை அந்த குறிப்பிட்ட போட்டிக்கு மட்டும் கேப்டனாக்கலாம்.
ஒருவேளை 4 போட்டிகள் கொண்ட தொடர் என்றால், அதற்கு புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கலாம். அப்போதுதான் எதிர்கால இந்திய அணி சரியான திசையை நோக்கி செல்லும்" என்றார் ஹர்பஜன்.
இறுதியாக பேசிய அவர் "எனக்கு தெரிந்தவரை இப்படியான முடிவை அணி நிர்வாகம் எடுத்தலாம். அதனை விராட் கோலி ஏற்கமாட்டார் என்றே தெரிகிறது. அப்படியே அவர் ஒத்துக்கொண்டால், நாம் நம்முடைய எதிர்கால இந்திய அணியை சரியான திசைக்கு கொண்டு செல்லவில்லை என்றே தெரிகிறது. மேலும் நாம் அடுத்த கேப்டனை தேர்ந்தெடுக்கவில்லை என்றே பொருள்படும்" என பேசியுள்ளார் ஹர்பஜன் சிங்.