ஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை 

ஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை 

ஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை 
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த ஆண்டு முன்வைத்தார். அத்துடன் கொல்கத்தா காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்திருந்தார். அதன்பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதுதொடர்பான வழக்கு அலிபூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்15 நாட்களுக்குள் ஷமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த பிடிவாரண்ட் ஆணைக்கு அலிபூர் நீதிமன்றத்தின் நீதிபதி ராய் சட்டோபாத்யாய இடைக்கால தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஷமியின் வழக்கறிஞர் சலீம் ரகுமான், “ஷமி மீதான பிடிவாரண்ட்டிற்கு அலிபூர் நீதிமன்ற நீதிபதி இரண்டு மாதகாலத்திற்கு இடைக்கால தடை பிறப்பித்துள்ளார். அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்” எனக் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com