'2022 டி20 உலக கோப்பையில் அஸ்வினுக்கு பதில் இவரை சேர்த்திருக்கலாம்' - தினேஷ் கார்த்திக்

'2022 டி20 உலக கோப்பையில் அஸ்வினுக்கு பதில் இவரை சேர்த்திருக்கலாம்' - தினேஷ் கார்த்திக்
'2022 டி20 உலக கோப்பையில் அஸ்வினுக்கு பதில் இவரை சேர்த்திருக்கலாம்' - தினேஷ் கார்த்திக்

2022 டி20 உலகக்கோப்பை தொடரில் அஸ்வினுக்கு பதில் சஹாலை சேர்த்திருந்தால் ஜெயித்திருக்கலாம் என்கிறார் தினேஷ் கார்த்திக்.

2022ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக மோசமான வருடமாகவே இருந்துள்ளது. பல தொடர்களை உள்ளூரிலும், வெளிநாட்டிலும் இந்திய அணி வென்றிருந்தாலும், ஆசிய கோப்பையில் தோல்வி, டி20 உலகக்கோப்பையில் படுதோல்வி என இந்திய அணியின் செயல்பாடு மந்தமாகவே இருந்தது.  

இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து வெளிப்படையாக பேசி வரும் தினேஷ் கார்த்திக், 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் அஸ்வினுக்கு பதில் சஹால் இடம் பெற்றிருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அணியின் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்து அமையும். நேர்மையாக சொல்லப்போனால், இந்திய அணியின் அஸ்வின் 2022 உலகக்கோப்பை தொடரின் ஆரம்ப கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால் முடிவில் இவருடைய ஆட்டம் நன்றாக அமையவில்லை. ஆனால் யுஸ்வேந்திர சாஹல் விளையாடியிருந்தால் நிச்சயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திருப்பார். மேலும் சஹால் நிச்சயம் இந்திய அணியின் சுவாரசியமான தேர்வாகவும் இருந்திருப்பார். ஆனால் இதுவெல்லாம் தொடர் முடிந்த பின்பு நமக்கு தெரிகிறது'' என தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com