இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை : இந்திய ஹாக்கி அணி துணை கேப்டன்

இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை : இந்திய ஹாக்கி அணி துணை கேப்டன்
இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை : இந்திய ஹாக்கி அணி துணை கேப்டன்

நடந்து முடிந்த காமன்வெல்த் தொடரில் ஹாக்கி விளையாட்டின் இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி படுதோல்வி அடைந்ததை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது என இந்திய ஹாக்கி அணியின் துணைக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

உலகின் 22வது காமன்வெல்த் தொடர் லண்டனில் பர்மிங்காமில் நடந்து முடிந்தது. இந்த காமன்வெல்த் தொடரில் இந்தியா 61 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்தது. தொடரில் ஹாக்கி விளையாட்டின் தங்கம் பெறுவதற்கான இறுதிப் போட்டி இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையில் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பைனல் வரை வந்த இந்திய அணி இந்த முறை தங்கம் வெல்லும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. படுதோல்வியடைந்த இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய ஹாக்கி அணியின் துணைக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ‘ எங்களுடைய இந்த ஆட்டம் ஏமாற்றமளிக்கிறது, இந்த தோல்வியை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை’ என்று வேதனை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் விரேன் ரஸ்குங்கா இந்திய அணியின் இந்த படுதோல்வி என் இதயத்தை நொறுக்கி விட்டது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com