பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் - அஸ்வின்

பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் - அஸ்வின்
பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் - அஸ்வின்

கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன்  அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடும்போது பந்து வீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க ஐ.சி.சி பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இன்ஸ்டாகிராம் உரையாடலில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும் போது “ என்னைப் பொருத்தவரை பந்தில் உமிழ்நீரை பயன்படுத்துவது என்பது, எனக்கு ஒரு இயல்பான விஷயம். அதனால் அதை இனிமேல் செய்யாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் கொரோனா பரவல் பற்றிப் பேசிய அஸ்வின் “ கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய நடவடிக்கையான சமூக விலகல், எனக்கு எழுபது எண்பதுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகளை நினைவூட்டுகிறது. காரணம் என்னவென்றால், அப்போது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்தால், வீரர்கள் அதனை ஒன்று கூடி கொண்டாடமாட்டார்கள்.

மாறாக அவரவர் இடத்திலேயே நின்று கொண்டு கைகளைத் தட்டிக் கொண்டாடுவார்கள். காலம் மாற மாற அனைத்தும் மாறியது. கொரோனா பரவல் நமக்கு நடைமுறை வாழ்க்கையில் இயற்கையை மதிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நாம் எப்போதும் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இதற்காக இயற்கையை அழிக்கிறோம். ஆனால் கொரோனா பரவல், நம்மை கொஞ்சம் பின்னோக்கி நடக்க வைத்திருக்கிறது. நாம் இயற்கைக்குத் தேவையானவற்றை காதுகொடுத்து கேட்காததே இந்தப் பாடத்திற்கு காரணம்” என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com