video image
video imagex page

நடுவர் கொடுத்த அவுட்; விரக்தியில் ஹெல்மெட்டை பேட்டால் அடித்து சிக்ஸருக்கு அனுப்பிய வீரர் #Viralvideo

நடுவர் கொடுத்த அவுட்டால் விரக்தியடைந்த கார்லோஸ் பிராத்வைட், தன் ஹெல்மெட்டை கழற்றி மறுகையில் பிடித்து, தான் வைத்திருந்த பேட்டால் தூக்கியடித்தார். அது, பவுண்டரி எல்லையில் போய் விழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

மேக்ஸ் 60 கரீபியன் 2024 (Max60 Caribbean 2024) கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ஜார்ஜ் முன்சே தலைமையிலான கரீபியன் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அதன் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற போட்டி ஒன்றில், நடுவர் கொடுத்த அவுட்டால் விரக்தியடைந்த கார்லோஸ் பிராத்வைட், தன் ஹெல்மெட்டை கழற்றி மறுகையில் பிடித்து, தான் வைத்திருந்த பேட்டால் தூக்கியடித்தார். அது, பவுண்டரி எல்லையில் போய் விழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்றைய போட்டியில் திசரா பெரேரா தலைமையிலான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலைமையிலான கிராண்ட் கேமன் ஜாகுவார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின்போது நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் தரப்பில் பேட்டிங் செய்ய வந்த கார்லோஸ் பிராத்வைட் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோசுவா லிட்டில் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பிராத்வைட் அவுட் ஆனார். ஆனால் கார்லோஸ் பிராத்வைட் அவுட் ஆன அந்த பந்து, பேட்டில் படாமல் அவருடைய தோள்பட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால், அதனைக் கவனிக்காத போட்டியின் நடுவர் தனது கைகளை உயர்த்தி அவுட் என சிக்னல் கொடுத்துவிட்டார்.

இதனால் கடுப்பான பிராத்வைட் நடுவரைப் பார்த்துக்கொண்டே கோபத்துடன் பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கோபமாக பெவிலியனுக்கு சென்றுகொண்டிருந்த பிராத்வைட் திடீரென வேகமாகத் தனது ஹெல்மட்டை கழற்றி கையில் வைத்திருந்த பேட்டை வைத்து ஆக்ரோஷமாக மைதானத்தில் இருந்து வெளியே அடித்தார். இதன் காரணமாக ஹெல்மட் பவுண்டரி லைனை தாண்டிச் சென்று விழுந்தது. பிறகு கையில் இருந்த பேட்டையும் தூக்கி எறிந்தார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ’1 கிலோ ஜிலேபி வாங்கி வா’- புகார்கொடுக்க சென்றவரிடம் உத்தரவிட்ட போலீஸ்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!

video image
5 பந்திலும் 5 சிக்ஸர்.. ரஷித் கான் ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடிய கிரன் பொல்லார்ட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com