\
இரட்டை ஆதாய பதவி: ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்!

இரட்டை ஆதாய பதவி: ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்!

இரட்டை ஆதாய பதவி: ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்!
Published on: 

இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரிய நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின், டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் ராகுல் டிராவிட் துணை தலைவராக இருந்து வருகிறார். இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக அவரை நியமித்தது இரட்டை ஆதாய பதவி வகிக்கும் பிரச்சினை என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின், விளக்கம் கேட்டு ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீ  அனுப்பினார். அதற்கு டிராவிட் ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் டி.கே.ஜெயின், வரும் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com