\
தமிழகம் வந்த தங்க மகன்கள் !

தமிழகம் வந்த தங்க மகன்கள் !

தமிழகம் வந்த தங்க மகன்கள் !
Published on

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் சதீஷ் சிவலிங்கம் மற்றும் அந்தோணி அமல்ராஜ்-க்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பளூதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸில் பதக்கம் வென்ற அந்தோணி அமல்ராஜ் இருவரும் இன்று காலை சென்னை வந்தனர். இவர்களை உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல் குழு பிரிவு டேபிள் டென்னிசில் தமிழகத்தைச் சேர்ந்த அந்தோணி அமல்ராஜ் தங்கம் வென்றிருந்தார். தமிழக அரசு அளித்து வரும் ஊக்கம் தங்களுக்கு மட்டுமன்றி, இளம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாக சதீஷ் சிவலிங்கமும், அந்தோணி அமல்ராஜும் தெரிவித்தனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com