காமன்வெல்த் போட்டி தொடக்க விழா எத்தனை மணிக்கு துவங்கும்? எதில் பார்க்க முடியும்?

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா எத்தனை மணிக்கு துவங்கும்? எதில் பார்க்க முடியும்?
காமன்வெல்த் போட்டி தொடக்க விழா எத்தனை மணிக்கு துவங்கும்? எதில் பார்க்க முடியும்?

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் டிவியில் கண்டுகளிக்கலாம்.

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழாவுடன் நடக்கவுள்ள இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நாடுகளின் அணிவகுப்பு நடக்கிறது. அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க விழாவில் சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.  பாப் இசைக்குழு டுரான் டுரான் மற்றும் பர்மிங்காமில் இருந்து பாடகர் இண்டிகோ மார்ஷல் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்துவார்கள். ராணி எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லஸ் தொடக்க விழாவில் பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. முதல் முறையாக காமன்வெல்த்தில் மகளிர் கிரிக்கெட், ஜூடோ போட்டிகள் நடத்தப்படுகின்றன. வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல் போட்டி இம்முறை நீக்கப்பட்டிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காளதேம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவை SONY LIV நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதையும் படிக்க: கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்!





Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com