‘முதல் முயற்சியிலேயே 136 கிலோ எடை’.. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற 19 வயது இந்திய இளைஞர்!

‘முதல் முயற்சியிலேயே 136 கிலோ எடை’.. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற 19 வயது இந்திய இளைஞர்!
‘முதல் முயற்சியிலேயே 136 கிலோ எடை’.. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற 19 வயது இந்திய இளைஞர்!

காமன்வெல்த் போட்டியில் 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் 19 வயதேயான ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 300 கிலோ (ஸ்நாட்ச் பிரிவில் 140 + க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 ) எடையைத் தூக்கி காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனையையும் நிகழ்த்தினார் ஜெர்மி.

ஸ்நாட்ச் பிரிவு பளுதூக்குதலில் உலகின் முன்னணி வீரர்கள் 120 கிலோ வரையிலான எடையை தூக்க போராடிக் கொண்டிருக்க, முதல் முயற்சியிலேயே 136 கிலோ எடையை தூக்கி அரங்கை அதிர வைத்தார் ஜெர்மி. 2வது முயற்சியில் 140 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தினார். 3வது முயற்சியில் 143 கிலோவை தூக்க முயன்றபோது அது முடியாமல் அவரது இன்றைய ஸ்நாட்ச் பிரிவு அதிகபட்சம் 140 கிலோவுடன் நின்றது. 2வது இடத்தில் இருந்த சமோவா நாட்டு வீரர் வைபவ நீவோ ஐயானே 127 கிலோ எடையைத் தான் தூக்கியிருந்தார். இதனால் 13 கிலோ முன்னிலையுடன் தங்கப்பதக்கம் நோக்கி பயணித்தார் ஜெர்மி.

க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியிலேயே 154 கிலோ எடையை தூக்கி வீசிய ஜெர்மி தனது 2வது முயற்சியில் 160 கிலோ எடையை தூக்கி மலைக்க வைத்தார். 3வது முயற்சியில் 165 கிலோவை தூக்க முயன்றபோது அது முடியாமல் போனது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக 300 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார் ஜெர்மி. 2வது இடம் பெற்று வெள்ளி வென்ற சமோவா நாட்டு வீரர் வைபவ நீவோ ஐயானே ஒட்டுமொத்தமாக 293 கிலோ (ஸ்நாட்ச் - 127 + க்ளீன் அண்ட் ஜெர்க் - 166) எடையைத் தான் தூக்கியிருந்தார். இதன்மூலம் 7 கிலோ முன்னிலை காரணமாக தங்கப்பதக்கம் ஜெர்மி வசம் வந்து சேர்ந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com