விளையாட்டு
காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை ஹீனா சித்து
காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை ஹீனா சித்து
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்று தீவிரமாக விளையாடி வருகின்றனர். பெண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பைனல் போட்டியில் தமிழக வீராங்கனை ஹீனா சித்து தங்கம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். இந்த போட்டியில் சித்து 240.8 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறினார். இவருடன் விளையாடிய ஆஸ்திரேலியா வீராங்கனை எலினா இரண்டாவது இடத்தில் 238.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கமும், 213.7 புள்ளிகள் பெற்று கிறிஸ்ட்டி கில்மா 3 மூன்றாவது இடத்தில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.