காமன்வெல்த் அட்டவணை வெளியீடு: ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்

காமன்வெல்த் அட்டவணை வெளியீடு: ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்

காமன்வெல்த் அட்டவணை வெளியீடு: ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்
Published on

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஹாக்கி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஹாக்கி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் இந்திய அணி ‘பி’  பிரிவில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து, மலேசியா, வேல்ஸ் அணிகளும் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்திய ஆடவர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வேல்ஸ் அணியை (ஏப்.8), மலேசியா அணியை (ஏப்.10), இங்கிலாந்து அணியை (ஏப்.11) ஆம் தேதிகளில் இந்திய அணி எதிர்கொள்கிறது.

5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து அணிகள் ஏ பிரிவில் உள்ளன. இந்திய பெண்கள் ஹாக்கி அணி தனது முதல் போட்டியில் வேல்ஸ் அணியை ஏப்ரல் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து மலேசியா(ஏப்6), இங்கிலாந்து(ஏப்8), தென்னாபிரிக்காவை (ஏப்10) ஆம் தேதிகளில் எதிர்கொள்கிறது. காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com