\
காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வீராங்கனை மீது தாக்குதல்!

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வீராங்கனை மீது தாக்குதல்!

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வீராங்கனை மீது தாக்குதல்!
Published on

காமன்வெல்த் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கல்லால் தாக்கப்பட்டார். 

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலில் தங்கம் வென்றவர், இந்திய வீராங்கனை பூனம் யாதவ். இவர் வாரணாசியில் உள்ள ரொஹானியா என்ற இடத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு நேற்றுச் சென்றார். உறவினருக்கும் அவர் பக்கத்து கிராமத்து தலைவருக்கும் சொத்துப் பிரச்னை இருக்கிறது.

இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு எழுந்தது. அந்தப் பிரச்னையில்  சமாதானப்படுத்த முயன்றார், பூனம். அப்போது திடீரென்று சிலர் அவர் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். சரமாரியாக கற்கள் வீசப்பட்டதால், பூனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு கைகலப்பும் ஏற்பட்டது. இதில் பூனம் மீது தாக்குதல் நடந்தது.

இதையடுத்து காவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பூனமை மீட்டு பத்திரமாக அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com