‘அவரை எழுப்புங்கள்’ -  கமெண்ட்ரியில் தூங்கி வழிந்த ரவிசாஸ்திரி

‘அவரை எழுப்புங்கள்’ - கமெண்ட்ரியில் தூங்கி வழிந்த ரவிசாஸ்திரி

‘அவரை எழுப்புங்கள்’ - கமெண்ட்ரியில் தூங்கி வழிந்த ரவிசாஸ்திரி
Published on

கமெண்ட்ரியில் தூங்கிய ரவிசாஸ்திரியை கிண்டல் செய்து ரசிகர்கள் ட்விட்டர்களில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர் முகமது சமி வேகத்தில் இரண்டு விக்கெட் அடுத்தடுத்து வீழ்ந்தன. பின்னர், ரூட், பெர்ஸ்டோவ் நிதானமாக விளையாடத் தொடங்கினர். 

இதனையடுத்து, உணவு இடைவேளைக்குப் பின்னர் கமெண்ட்ரி ரூம் வந்தார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. ஆட்டம் நிதானமாக செல்ல ரவிசாஸ்திரி கண்கள் லேசாக சொக்க தொடங்கியது. அவர் மெல்ல தூங்கி வழிய அதனை எப்படியோ கேமிராவில் பதிவு செய்துவிட்டனர். ரசிகர்களும் ரவிசாஸ்திரி தூங்கி வழிந்ததை பார்த்துவிட்டனர். 

இதனையடுத்து, ரவிசாஸ்திரி தூங்கிய படத்தை பதிவிட்டு ரசிகர்கள் கலாய்த்தனர். மீம்ஸ்களையும் பதிவிட்டனர். 

‘அப்ப இந்திய பயிற்சியாளர் தூங்கி விட்டார்..?’ 
‘போர் அடிக்கும் படத்தை திரையரங்கில் பார்த்தால் இதான் நிலை..’ 
‘யாராவது ஒருத்தர் ரவிசாஸ்திரியை எழுப்ப வேண்டும், இப்போது டீ பிரேக் வந்துவிட்டது. அவர் வேலை செய்ய வேண்டும்’ இவ்வாறு பலர் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com