கடைசிக்கட்ட ஓவர்களில் தெளிவு வேணும்: சொல்கிறார் பும்ரா!

கடைசிக்கட்ட ஓவர்களில் தெளிவு வேணும்: சொல்கிறார் பும்ரா!

கடைசிக்கட்ட ஓவர்களில் தெளிவு வேணும்: சொல்கிறார் பும்ரா!
Published on

’கடைசிக்கட்ட ஓவர்களில் பந்துவீசும் போது தெளிவு முக்கியம். இல்லையென்றால் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்’ என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பும்ரா கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -மும்பை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், மும்பை அணியில் டுமினிக்கு பதிலாக பொல்லார்ட் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் கருண் நாயர், மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு யுவராஜ்சிங், மனோஜ் திவாரி இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. பொல்லார்ட் 50 ரன்களும் குணால் பாண்ட்யா 32 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டையும் அஷ்வின் 2 விக்கெட்டையும் விழ்த்தினர்.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணி வெற்றியின் விளிம்பில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் கே.எல்.ராகுல் 60 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். ஆரோன் பின்ச் 46 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றை தக்கவைத்துக் கொண்டது. பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு மங்கிவிட்டது.

பின்னர் பும்ரா கூறும்போது, ’இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. கடைசிக்கட்ட ஓவர்களில் பந்துவீசும் போது தெளிவு முக்கியம். இல்லையென்றால் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். நான் தெளிவாக இருந்தால் எனது திட்டத்தைச் சரியாகச் செயல் படுத்தினேன். பேட்ஸ்மேன் உங்கள் பந்தை அடிக்கும்போது திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும். கே.எல்.ராகுல் சிறப்பாக அடித்து ஆடினார். இதுபோல் அடித்து ஆடும்போது சில நேரம் பந்துவீசுவது கடினம்தான். இருந்தாலும் நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். அது சரியாக வேலை செய்தது. இந்த பிட்சில் மெதுவான பந்தை சரியான லென்தில் வீசினேன். ஆனால் கிரிப் கிடைக்கவில்லை. இதனால் இன்னும் மெதுவாக வீசினேன். விக்கெட் கிடைத்தது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com