\
ஜாக்பாட் அடித்த கிறிஸ் மோரிஸ்! உச்சம் தொட்ட ஏலத் தொகை... எவ்வளவு தெரியுமா?

ஜாக்பாட் அடித்த கிறிஸ் மோரிஸ்! உச்சம் தொட்ட ஏலத் தொகை... எவ்வளவு தெரியுமா?

ஜாக்பாட் அடித்த கிறிஸ் மோரிஸ்! உச்சம் தொட்ட ஏலத் தொகை... எவ்வளவு தெரியுமா?
Published on

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

கிறிஸ் மோரிஸ் கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த முறை ரூ.10 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது ஆர்சிபி.

இந்நிலையில் இம்முறை கிறிஸ் மோரிஸை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்ததது.

கடந்த முறை அதிக தொகைக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தப்போதும், கிறிஸ் மோரிஸை அந்த அணி முழுமையாக பயன்படுத்தவில்லை. விளையாடிய போட்டிகளிலும் அவர் பெரிய அளவில் பங்களிப்பு செலுத்தவில்லை. இருப்பினும் அவர் இந்த அளவிற்கு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com