மசாஜ் பெண் பஞ்சாயத்து: விடுவிக்கப்பட்டார் கிறிஸ் கெய்ல்

மசாஜ் பெண் பஞ்சாயத்து: விடுவிக்கப்பட்டார் கிறிஸ் கெய்ல்
மசாஜ் பெண் பஞ்சாயத்து: விடுவிக்கப்பட்டார் கிறிஸ் கெய்ல்

தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக, ஆஸ்திரேலிய மசாஜ் பெண் கூறிய குற்றச்சாட்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர், கிறிஸ் கெய்ல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு ஆஸ்திரேலிய பெண் லியன் ரஸல் என்பவர் சென்றார். அப்போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் தனது உடைகளை களைந்து அநாகரிமாக நடந்துகொண்டதாக, பேர்பேக்ஸ் என்ற மீடியா செய்தி வெளியிட்டது. இதை மறுத்து வந்தார் கிறிஸ் கெய்ல். ஃபேர்பேக்ஸ் செய்தி மீடியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நியூ சவுத்வேல்ஸ் உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணையில் சம்மந்தப்பட்ட பெண், கண்ணீர் விட்டு அழுதார். அப்போது, ‘கெயில் என்னை கீழே தள்ளி, அவர் இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்து, இதைதான் தேடுகிறீர்களா? என்று கேட்டார்’ எனச் சொன்னார். வழக்கு விவகாரம் சூடு பிடித்த நிலையில், கிறிஸ் கெய்லுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. கெய்ல் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால் அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது

இதையடுத்து, ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் நல்ல மனிதன்’ என்று தெரிவித்துள்ளார் கெய்ல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com