புதிய சாதனையை நோக்கி அதிரடி வீரர் கிறிஸ் கெயில்

புதிய சாதனையை நோக்கி அதிரடி வீரர் கிறிஸ் கெயில்

புதிய சாதனையை நோக்கி அதிரடி வீரர் கிறிஸ் கெயில்
Published on

இந்தியாவிற்கு எதிராக இன்று நடைபெறவிருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் புதிய சாதனை படைக்கவுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. டி20 தொடரை இந்தியாவிடம் இழந்த நிலையில் இன்று தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லும் முனைப்பில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில்  வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் இன்றைய போட்டியில் களமிறங்கும் பட்சத்தில் ஒரு புதிய சாதனையை படைக்கவுள்ளார். அதாவது இன்றைய போட்டி கெயிலிற்கு 296ஆவது ஒருநாள் போட்டியாக அமையும். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் சார்பில்  அதிக ஒருநாள் போட்டியில் கலந்து கொண்ட வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெயில் படைப்பார். இவர் முன்னதாக லாரா படைத்திருந்த 295 போட்டிகள் என்ற சாதனையை முறியடிப்பார்.

மேலும் இப்போட்டியில் கெயில் 11 ரன்கள் அடிக்கும்பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் கெயில் படைக்கவுள்ளார். இதுவரை 295 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள கெயில் 10338 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10348 ரன்களுடன் லாரா முதலிடத்தில் உள்ளார். இந்தச் சாதனையை படைக்கும் பட்சத்தில் கெயில் மீண்டும் லாராவின் சாதனையை முறியடிப்பார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com