டி10 லீக் : மரண மாஸ் காட்டிய கிறிஸ் கெயில் : 22 பந்துகளில் 84 ரன்கள் விளாசல்!

டி10 லீக் : மரண மாஸ் காட்டிய கிறிஸ் கெயில் : 22 பந்துகளில் 84 ரன்கள் விளாசல்!

டி10 லீக் : மரண மாஸ் காட்டிய கிறிஸ் கெயில் : 22 பந்துகளில் 84 ரன்கள் விளாசல்!
Published on

2021-க்கான அபுதாபி டி10 லீக் தொடரில் அபுதாபி அணிக்காக விளையாடி வரும் மேற்கிந்திய தீவை சேர்ந்த கிறிஸ் கெயில் 22 பந்துகளில் 84 ரன்களை குவித்து ‘நான் தான் யுனிவெர்ஸ் பாஸ்’ என கிரிக்கெட் உலகிற்கு தன் ஆட்டத்தின் மூலம் சொல்லியுள்ளார். அதோடு இந்த இன்னிங்ஸில் 12 பந்துகளில் 50 ரன்களை குவித்து, டி10 கிரிக்கெட்டில் முகமது ஷெஷாத்துடன் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கெயில். 

மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெயில் இந்த மரண மாஸான இன்னிங்ஸை விளையாடியுள்ளார். அவரது இன்னிங்ஸில் 9 சிக்ஸர், 6 பவுண்டரிகளும் அடங்கும். முதலில் பேட் செய்த மராத்தா அரேபியன்ஸ் அணி 10 ஓவர்களுக்கு 97 ரன்களை குவித்தது. அதையடுத்து விளையாடிய அபுதாபி அணிக்காக கெயில் இன்னிங்ஸை ஓபன் செய்தார். 

அவரது அதிரடியால் 5.3 ஓவர்களில் 100 ரன்களை எடுத்து அபுதாபி அணி வெற்றி பெற்றது. கெயில் புயலாக உருமாறி நேற்றைய ஆட்டத்தின்போது பேட்டிங்கில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். வரும் ஐபிஎல் சீசனுக்கு ‘நான் தயார்’ என கெயில் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com