பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு இணையாக தன்னுடைய ஒல்லியான உடலை சட்டையை கழட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார் ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் சஹால்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி விளையாடிய நடப்பு ஐபிஎல் சீசனின் 26வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி மிகவும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பரிதாபமாக தோற்றது. இதனால் தொடர் தோல்விகளை சந்தித்த பஞ்சாப் அணி இப்போது உத்வேகம் பெற்றுள்ளது.
இந்தப் போட்டி முடிந்தப் பின்பு இரு அணி வீரர்களும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கிறிஸ் கெயில் தன்னுடைய ஜெர்சியை கழட்டி கட்டுமஸ்தான உடலை காட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இதனை பார்த்த சஹாலும் தன்னுடைய ஜெர்சியை கழட்டி போஸ் கொடுத்தார். இருவரும் பாடி பில்டர்களைப் போல போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.