சாதிப்பாரா ’சைனாமேன்’ குல்தீப்?

சாதிப்பாரா ’சைனாமேன்’ குல்தீப்?

சாதிப்பாரா ’சைனாமேன்’ குல்தீப்?
Published on

இலங்கையுடனான அடுத்த டெஸ்ட் போட்டியில் ’சைனாமேன்’ வகை பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் களமிறங்குவார் என்று தெரிகிறது.

இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3-வது போட்டி, 12-ம் தேதி கண்டியில் தொடங்குகிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ’சைனாமேன்’ வகை பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இதில் இடம்பெறுவார் என தெரிகிறது. 

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தில் நின்ற வீர்ர்களுக்கு கூல் டிரிங்ஸ் கொடுத்து வந்த குல்தீப், அடுத்த போட்டியில் களமிறங்குவது பற்றி கூறும்போது, ‘நான் ’சைனாமேன்’ வகை பந்துவீச்சை ஆரம்பிக்கும்போது அதே போல பந்துவீச இங்கு யாருமில்லை. இப்போது இந்த வகை பவுலர்கள் அதிகமாகிவிட்டார்கள். எந்த பயிற்சி அகாடமிக்கு சென்றாலும் எட்டு, பத்து பேர் சைனாமேன் ஸ்டைலில் பந்துவீச்சு பயிற்சி எடுப்பதைப் பார்க்கலாம். ஒரு அணியின் கேப்டன் உங்களை நம்பினால் போதும். பாதி வேலை முடிந்துவிடும். என்னை கோலி நம்புகிறார். உற்சாகப்படுத்துகிறார். அவர் நம்பிக்கையை காப்பாற்றுவேன்’ என்கிறார் குல்தீப்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com