சீன ஒபன் டென்னிஸ்: கால்இறுதியில் சானியா, போபண்ணா
சீன ஒபன் மகளிர் மற்றும் ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சீனாவில் உள்ள பெய்ஜிங்கில், சீன ஒபன் மகளிர் மற்றும் ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்சா மற்றும் அவரது இணையான சுஹாய் ஜோ ஆகிய ஜோடி, பெல்ஜியம்-டச்சு இணையான எல்லிஸ் மற்றும் டெமியை 7-5, 6-2 என்று நேர்செட்களில் வெற்றி கொண்டது. இதன்மூலம் மகளிருக்கான சீன ஒபன் போட்டியில் சானியா மிர்சா ஜோடி கால் இறுதிக்கும் முன்னேறியுள்ளது.
இதேபோன்று இந்திய வீரரான போபண்ணா மற்றும் அவரது இணையான உருகுவேவை சேர்ந்த பாப்லோ ஆகியோர், சீனாவைச் சேர்ந்த மோ-ஹின் காங் மற்றும் ஜீ ஷாங் ஜோடியை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி கொண்டது. இதன்மூலம் ஆடவருக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த போபண்ணா இணையும் கால் இறுதிக்கும் முன்னேறியுள்ளது.