தோனியின் முடிவில் யாரும் தலையிட முடியாது தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்

தோனியின் முடிவில் யாரும் தலையிட முடியாது தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்
தோனியின் முடிவில் யாரும் தலையிட முடியாது தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. டி20, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக விராத் கோலியே நீடிக்கிறார். தோனி அணியில் இடம்பெறவில்லை. ரஹானே, அஸ்வின் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய, ஷிகர் தவான் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “ஓய்வு அறிவிப்பது என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் தலையிட முடியாது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தோனி தானாகவே விலகியுள்ளார். அவர் தனது பாரா மிலிட்டரி பிரிவில் பணியாற்ற போவதாக தெரிவித்திருந்தார். 

மேலும் தோனி ஒரு ஜாம்பவான் வீரர். அவர் ஓய்வை அறிவிக்க அவருக்கு தெரியும். அணியின் தேர்வுக் குழு தலைவர் என்ற முறையில் அணியின் எதிர்காலத்திற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க தீர்மானித்துள்ளோம். அதன்படி ரிஷப் பந்த் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார். அவர் நன்றாக செயல்பட முடிந்த வரை அதிக வாய்ப்பு வழங்கப்படும். இந்த முடிவு குறித்து நாங்கள் தோனியிடமும் ஆலோசித்தோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com