டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்து புஜாரா சாதனை

டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்து புஜாரா சாதனை

டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்து புஜாரா சாதனை
Published on

டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்களும், இலங்கை அணி 294 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4-ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து இருந்தது. கே.எல்.ராகுல் 74, புஜாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 5-வது நாளான இன்று இந்திய அணி விளையாடி வருகிறது. இன்றையை தினத்தில் விளையாடியதை அடுத்து டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார். முதல் இரண்டு நாட்கள் மழையால் ஆட்டத்தின் பெரும் பகுதி பாதிக்கப்பட்டது. இதனால் புஜாரா முதல் நாள் களமிறங்கி மூன்றாவது நாள் வரை பேட்டிங் செய்ய நேரிட்டது. முதல் இன்னிங்சில் புஜாரா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாவது நாளில் விளையாட தொடங்கிய இலங்கை அணி நேற்று 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி விளையாடியது. 94 ரன்களில் தவான் ஆட்டமிழக்க புஜாரா 3-வது வீரராக களமிறங்கினார். இதனால் 4-வது நாளும் அவர் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனையடுத்து 5-வது நாளான இன்றும் அவர் பேட்டிங் செய்துள்ளார். இதன் மூலம், ரவிசாஸ்திரி, எம்.எல்.ஜெய்சிம்ஹாவை தொடர்ந்து புஜாரா டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் இதுவரை 9 பேர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 

இன்றைய போட்டியில் புஜாரா 51 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் குறைவான ரன்கள் எடுத்தும் 5 நாட்கள் களத்தில் இருந்த வீரர் என்பதை புஜாரா பதிவு செய்துள்ளார். இந்திய அணி இன்றைய தினத்தில் 50 ரன்களை எடுப்பதற்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ராகுல் 79, புஜாரா 22, ரகானே 0, ரன்களில் ஆட்டமிழந்தனர். 56 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com