சாரட் வண்டியில் தாயை அமரவைத்து சாரதியாக வந்த பிரக்ஞானந்தா! #Video

குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தாயை அமர வைத்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீதி வலம் வந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த காணொளியை, இங்கே பார்க்கலாம்!

உலகக்கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா 2 ஆவது இடம் பிடித்தார். பிரக்ஞானந்தாவுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவருக்கு சென்னையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதையொட்டி சாரட் வண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தாயக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரை குதிரைகள் பூட்டிய சாரட்டில் அமரவைத்து, சாரதியாக பிரக்ஞானந்தா ஓட்டி சென்றார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. விழாவில் பிரக்ஞானந்தாவுக்கு பிரம்மாண்ட மாலை சூட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com