பிரக்யானந்தா - கார்ல்சன் இடையேயான போட்டியில் இது நடக்க வாய்ப்பு - துல்லியமாக கணித்த விஸ்வநாத ஆனந்த்!

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் பிரக்ஞானந்தா ஒயிட்டிலும், மேக்னஸ் கார்ல்சன் பிளாக்கிலும் விளையாடினர். இன்று கார்ல்சன் ஒயிட்டில் விளையாடினார்.

மேக்னஸ் கார்ல்சனும் , பிரக்ஞானந்தாவும் மோதிக்கொண்ட கிளாசிக்கல் சுற்றின் முதல் போட்டி நேற்று டிராவானது. 35 மூவ் முடிவில் ரூக் நைட் பான் எண்டிங் நோக்கி போட்டி நகர்ந்ததால், இருவரும் டிரா என ஒப்புக்கொண்டனர்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் பிரக்ஞானந்தா ஒயிட்டிலும், மேக்னஸ் கார்ல்சன் பிளாக்கிலும் விளையாடியதால் , இன்று கார்ல்சன் ஒயிட்டில் விளையாடினார். இன்றையப் போட்டியில் டிராவில் முடிந்தது. இதனால் முடிவை தீர்மானிக்கும் டைபிரேக்கர் சுற்று நாளை நடைபெறவுள்ளது. இந்த சூழலில் இன்றையை இரண்டாவது சுற்று டிராவில் முடிய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கணித்து இருந்தார் இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்.

இது குறித்து செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத ஆனந்த் கூறும் பொழுது, ”இன்று தான் கடினமான நாள். மேக்னஸ்க்கு வெள்ளை கலர் அதை அப்படி ஈஸியாக விட்டுவிட முடியாது. ஏனெனில் நேற்று ஆடிய மேக்னஸ் மிகவும் சிறப்பாக ஆடினார். இன்று போட்டி கடுமையாக இருக்கும். டிராவில் முடிந்தாலும் பிரக்ஞானந்தாவிற்கு நல்ல ரிசல்ட் தான்” என்றார். விஸ்வநாதன் ஆனந்த் பேசியதன் முழு தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com