“முடிவு எதுவாக இருந்தாலும் இந்தியா பெருமை கொள்கிறது” - பிரக்ஞானந்தாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செஸ் போட்டியில் சர்வதேச தரவரிசையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள வீரர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவின் வெற்றிப்பயணம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக தமிழ்நாடு முதலமைச்சர் தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இறுதிப் போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும், அவரது சாதனை 140 கோடி மக்களின் கனவுகளுடன் எதிரொலிப்பதாகவும், இந்தியா பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்றது எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com