”வரலாறு படைத்தார்”- சர்வதேச செஸ் போட்டியில் சாதித்த தமிழக இளம் வீரர் குகேஷ் - குவியும் பாராட்டு மழை!

தனது இளம் வயதான 17 ஆம் வயதிலேயே சர்வதேச செஸ் போட்டியில் வெற்றிப்பெற்று, உலக சாம்பியன்ஷிப் போட்டிற்கு தகுதி பெற்ற இளம் வீரர் என்ற பெருமையை படைத்துள்ள குகேஷுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குகேஷ்
குகேஷ்முகநூல்

தனது இளம் வயதான 17 ஆம் வயதிலேயே சர்வதேச செஸ் போட்டியில் வெற்றிப்பெற்று, உலக சாம்பியன்ஷிப் போட்டிற்கு தகுதி பெற்ற இளம் வீரர் என்ற பெருமையை படைத்துள்ள குகேஷுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செஸ் உலகில் மிக பெரிய தொடராக பார்க்கப்படும் செஸ் candidates தொடர் கனடாவில் கடந்த 3ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த CANDIDATES தொடரில் வெற்றி பெரும் நபர் செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவதற்கான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில், இதில் பங்கேற்ற தமிழகத்தின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்13 ஆவது சுற்றுகள் முடிவில் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இந்நிலையில், 14 ஆவது சுற்றின் முடிவில், குகேஷ்-ஹிக்காரு நாக்கமூராவை எதிர்த்து விளையாடி, 9 புள்ளிகளை பெற்றார்.குகேஷின் எதிரில் ஆடியவர்களும் டிராவில் முடியவே, தனது 17 வயதான இளம் வயதிலேயே candidates செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் குகேஷ்.

இந்நிலையில், சமூக வலைதளங்கள் இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.

அதில், ”வெறும் 17 வயதில், அவர் #FIDECandidates இல் இதுவரை இல்லாத இளைய சவாலாகவும் , வெற்றியைப் பெற்ற முதல் இளம் வயதினராகவும் வரலாறு படைத்துள்ளார். டிங் லிரனுக்கு எதிராக இவர் எதிர்கொள்ளவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டிக்கு எனது வாழ்த்துக்கள்.!”என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், 5 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், ”17 வயதில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று குகேஷ் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். போட்டியில் அவரது முதிர்ச்சியும் வெளிப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றுள்ளார். நெருக்கடியான சூழ்நிலையை அவர் சமாளித்து விளையாடியது சிறப்பாக இருந்தது. கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் குகேஷ் வெற்றி பெற்றது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொடரை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று குகேஷின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், ”குகேஷின் மிகச்சிறிய வயதில், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சனின் செஸ் ஆட்டம்தான் அவன் கண்ட முதல் டோர்னமண்ட். அது அவனுக்கு மிகப்பெரிய ஒரு இன்ஸ்பிரேஷன். நிச்சயம் அவனுக்கு இதே வாய்ய்பு கிடைத்தால் அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமியும் குகேஷுக்கு தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.

”தமிழ்நாட்டைச் சேர்ந்த @டி குகேஷ் அவர்கள் மிக இளம் வயதில் #FIDECandidates சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com