\
கார்ல்சன் - பிரக்ஞானந்தா
கார்ல்சன் - பிரக்ஞானந்தாweb

இந்திய செஸ் வரலாற்றில் மகத்தான தருணம்.. NO.1 வீரர் கார்ல்சனை 2 முறை தோற்கடித்த பிரக்ஞானந்தா!

2026 நார்வே செஸ் தொடரின் 8வது சுற்றில் கருப்பு காய்களுடன் கார்ல்சனை எதிர்கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா ஒரே தொடரில் 2வது முறையாக நம்பர் 1 வீரரை தோற்கடித்து வரலாறு படைத்துள்ளார்.
Published on

இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேயில் நடைபெற்றுவரும் நார்வே செஸ் 2026 தொடரில் 2 முறை உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை அவருடைய சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாறு படைத்துள்ளார்.

செவ்வாயன்று நடைபெற்ற நார்வே செஸ் 2026 போட்டியில், உள்ளூர் நாயகனும் உலகின் நம்பர் 1 வீரருமான மேக்னஸ் கார்ல்சனை கிளாசிக்கல் செஸ்ஸில் இரண்டாவது முறையாக வீழ்த்தி, அவருக்கு மற்றொரு அதிர்ச்சிகரமான தோல்வியை பரிசளித்தார் பிரக்ஞானந்தா.

இந்த வெற்றியானது பிரக்ஞானந்தாவை 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு உயர்த்திய அதே வேளையில், மாக்னஸ் கார்ல்சன் தனது எட்டாவது நார்வே சதுரங்கப் பட்டத்தை வெல்லும் நம்பிக்கையையும் தகர்க்கவைத்துள்ளது.

உலகின் முதல் வீரராக சாதனை..

மதிப்புமிக்க செஸ் தொடரான நார்வே செஸ் தொடரின் முதல் இந்திய சாம்பியன் ஆவதற்கான வாய்ப்பை உயர்த்திய பிரக்ஞானந்தா, ஒரே தொடரில் கிளாசிக்கல் ஆட்டங்களில் நம்பர் 1 வீரரான கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்த முதல் இந்தியர் என்ற வரலாறை படைத்துள்ளார். மேலும், இந்த ஆண்டில் உலகின் நம்பர் 1 வீரரை கிளாசிக்கல் ஆட்டங்களில் இரண்டு முறை தோற்கடித்த முதல் வீரரும் பிரக்ஞானந்தா மட்டுமே. இந்த நிகழ்வு இந்திய செஸ் விளையாட்டுக்கு ஒரு மகத்தான தருணமாக மாறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com