\
செஸ் வீராங்கனைக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை!

செஸ் வீராங்கனைக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை!

செஸ் வீராங்கனைக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை!
Published on: 

உலக சதுரங்கப் போட்டி, காமன்வெல்த் சதுரங்கப் போட்டி மற்றும் ஆசிய இளைஞர் சதுரங்கப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த பி.வி.நந்திதா. கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய இளைஞர் சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டமும், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 34வது உலக சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றிருக்கிறார்.

இந்தச் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு தலைமைச் செயலகத்தில் இன்று காலை ஊக்கத் தொகைக்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com