செஸ் ஒலிம்பியாட்: பங்கேற்கும் தோனி; கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளுடன் நிறைவு விழா மேடை!

செஸ் ஒலிம்பியாட்: பங்கேற்கும் தோனி; கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளுடன் நிறைவு விழா மேடை!
செஸ் ஒலிம்பியாட்:  பங்கேற்கும் தோனி; கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளுடன் நிறைவு விழா மேடை!

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குகிறார்.

மாமல்லபுரத்தில் 186 நாடுகள் பங்கேற்ற 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிகள் செவ்வாயன்று நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, சென்னை - நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பங்கேற்கிறார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.

வண்ணமயமான நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்காக 600 கலைஞர்கள் பங்கேற்ற ஒத்திகையும் நடந்துள்ளது. முப்பரிமாண முறையில் ஒலி ஒளி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவை ஒருங்கிணைத்த திரைப்பட இயக்குநர் விக்ணேஷ் சிவனே, நிறைவு நாள் விழாவையும் ஒருங்கிணைக்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இன்று இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய மகளிர் ஏ அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com