\
ஐஎஸ்எல் கால்பந்து: சென்னையின் எஃப்சி முதல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னையின் எஃப்சி முதல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னையின் எஃப்சி முதல் வெற்றி
Published on: 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நான்காவது சீசனில், சென்னையின் எஃப் சி அணி வெற்றிக் கணக்கை தொடக்கியது.

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, கவுகாத்தியை சேர்ந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. சென்னையின் சொந்த மைதானத்தில் இந்தப்போட்டி நடைப்பெற்றது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னையின் எஃப் சி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை அணிக்காக ரஃபேல் அகஸ்டோ, முஹமது ரஃபி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இரண்டாவது போட்டியில் விளையாடிய சென்னையின் எஃசி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com