\
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : சென்னை அணி மோதிய கடைசி லீக் ஆட்டம் டிரா

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : சென்னை அணி மோதிய கடைசி லீக் ஆட்டம் டிரா

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : சென்னை அணி மோதிய கடைசி லீக் ஆட்டம் டிரா
Published on

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எஃப்சி, வடகிழக்கு யுனைடட் இடையேயான ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

கவுகாத்தியில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் ஷய்கானி கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். வடகிழக்கு யுனைடட் அணியின் முன்கள வீரர் மார்டின் சாவ்ஸ், இரண்டு கோல்களை அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

போட்டியில் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் சென்னை வீரர் CHHANGTE த்ரில் கோல் அடித்ததால், ஆட்டம் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

நடப்பு சீசனில் சென்னை அணி 18 போட்டிகளில் விளையாடி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று 29 புள்ளிகளை வசமாக்கியுள்ளது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வரும் 29 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் சென்னை அணி கோவா அணியை எதிர்கொள்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com